திருகோணமலை மாவட்ட தமிழ் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு……….

மூதூர் தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் பிரதேச தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவேண்டும் என முன்னாள் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட பீடாதிபதி பாலசுகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பில் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூதூர் பிரதேசம் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை பாரிய அபிவிருத்தி எதனையும் கண்டு கொள்ளவில்லை.

தேர்தல் ஒன்றுக்கு தயாரான சூழ் நிலையில் மூதூர் தமிழ் மக்கள் சார்பாக சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறேன்
1)உடனடியாக சம்பூர் அனல் மின் நிலயம் அமைப்பதற்கான முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு.சூரிய சக்தியிலான மின்சாரம் பெறக்கூடிய பாரிய மின் உற்பத்தி நிலயத்தை மூதூர் கிழக்கில் அமைக்க முயற்சிகளை மேற்கொள்ளல்.

2)மூதூர் தமிழ் பிரதேசங்களை இணைத்ததான தனியான பிரதேச சபையயையும் பிரதேச செயலகத்தையும் கொட்டியாரம் என்ற பெயரில் அமைத்தல்

3)தமிழ் பாடசாலைகளை இணைத்ததான தனியான கல்வி வலயத்தை உருவாக்குதல்.

4)தொழில் நுட்பக் கல்ல்லூரி ஒன்றை அமைத்தல்.

5)விவசாய பயிற்சி கல்லூரி ஒன்றை அமைத்தல்

6)அன்னிய செல வாணியயை ஈட்டித் தரக் கூடிய விவசாய பண்ணைகளை உருவாக்குதல்

7)மகாவலி கங்கையை மரவட்டக் குளத்துடனும் இளக்கந்தை குளத்துடனும் இணைத்து விவசாயத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துதல்..

8)கிழக்கு பல்கலைக் கழக திருமலை வளாகத்தின் சித்த வைத்திய பீடத்தினை மூதூர் பிரதேசத்தில் அமைத்தல் யாழ்ப்பாண சித்த வைத்திய பீடம் கைதடியில் அமைந்திருத்தல் போல.

9)தொழிற் பேட்டைகளை உருவாக்குதல்

10)திருகோணமலையில் மையம் கொண்டிருக்கும் ஆசிரியர் வளத்தை சரியான முறையில் பங்கிடல்.
(இது இன்றய கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் கவனத்திற்கு)

11)மூதூர் கிழக்கில் எல்லா வசதிகளையும் கொண்ட வைத்திய சாலையயை அமைத்தல்.

12)தமிழ் பிரதேசங்களில் அரச வங்கிகளின் கிளைகளை ஏற்படுத்தி கொடுத்தல்.

13)ஆக்கிரமிக்கப் படும் தமிழர்களின் பூர்விக நிலங்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள்.

இது தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் கவனம் செலுத்தி நடவடிக்கையெடுக்கவேண்டும் என அவர்கோரிக்கை விடுத்துள்ளார்.