தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனையின் கீழ் போதைவஸ்து பாவனை அற்ற நாட்டினை உருவாக்கும் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் காத்தான்குடி முச்சக்கரவண்டி சங்கம் மற்றும் கல்வி திணைக்களம் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சர் வி.எம்.எம்.தஸாநாயக்க மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெலகெதர,பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துசார உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைவஸ்துக்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.
போதைப்பொருளை நாட்டில் இருந்து விரட்டியடிக்க தாங்களும் ஒன்றிணையுங்கள் என்னும் தொனிப்பொருளில் இந்த ஊர்வலம் நடாத்தப்பட்டது.
நற்பாதையை தடுக்கும்போதை வேண்டாம்,போதையை ஒழித்து விபத்தை தடுப்போம்,போதையை ஒழித்து மேதைகளாவோம் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் போதை பாவனைக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.