கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தின் 8 ஆவது ஆண்டு நிறைவு விழா மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது.
சம்மேளனத்தின் தலைவர் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்;ற இவ்விழாவில் சம்மேளனத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் உயர் கல்வி கற்பதற்காக 2015 ஆம் ஆண்டில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகவிருக்கும் மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக நமுணுகுல மதங்கமா மகரிஷி ஆஷ்ரமத்தின் தலைவர் விஸ்வப்பிரம்மஸ்ரீ இராஜமாதங்கி சுவாமிகள் ஆன்மீக அதிதியாக கலந்துகொண்டார்.
கொழும்பு பட்டக்கண்ணு பவுண்டேசன் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஏ. தியாகராஜா பிரதம அதிதியாகவும் ஓய்வு நிலை நீதிபதி கா. தட்சணாமூர்த்தி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிட்சை நிபுணர் பீதாம்பரம் ஜீபரா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,
ஏறாவூர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பிரதம பூசகர் குமாரசாமி வாமதேவன் மற்றும் பெரியபோரதீவு விஸ்வகர்ம ஆதியீன ஆய்வாளர் கலாபூசணம் பூ.ம. செல்லத்துரை ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் சம்பூர் தொடக்கம் பொத்துவில் வரையான விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆரம்ப நிகழ்வாக சங்கீதவிற்பன்னர் திருமதி சாந்தினி தர்மநாதனால் விஸ்வகர்ம சம்மேளன கீதம் இசைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.