மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபையின் 50வது ஆண்டு நிறைவு பொன் விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பணிக்காக இந்த விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபை அமைக்கப்பட்டு நடாத்தப்பட்டுவருகின்றது.
விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபையின் தலைவர் இ.சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சுpறப்பு அதிதியாக கம்பவாரி இ.ஜெயராஜ் கலந்துகொண்டதுடன் ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசன் சுவாமி சதுர்புஜானந்தஜி மகராஜ் மற்றும் கல்லடி,காயத்திரிபீடத்தினை சேர்ந்த சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது யாழ்ப்பாணத்தினை சேர்ந்த கலைவாணர் வில்லிசைக் குழுவினரின் ஆசையை வென்ற அடியர்கள் என்னும் தலைப்பிலான வில்லுப்பாட்டும் கம்பவாரி இ.ஜெயராஜின் தொண்டர்களின் மகிமை என்னும் தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.
அத்துடன் விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபையின் 50வது ஆண்டு நிறைவை குறிக்கும் பொன்விழா சிறப்பு மலரும் இங்கு வெளியிடப்பட்டதுடன் விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபையின் வளர்ச்சிக்கு பணியாற்றிய 63பேரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.