மதுபானத்துக்கு அடிமையானவரின் நிலையே தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்போருக்கும் ஏற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.
மட்டக்களப்ப மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆரையம்பதி இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் பொநல சிந்தனையினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நேற்று
சமூக சேவையாளர் ஏ.மகேந்திரனின் பூரண அனுசரணையுடன் பாடசாலை அதிபர் சி.சிவகுமாரின் தலைமையில் இந்த போட்டிகள் நடாத்தப்பட்டன.
கட்டுரை,பேச்சு,ஆங்கில வான்மையினை அடிப்படையாகக்கொண்டு இந்த போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
மாணவர்கள் மத்தியில் பொதுநலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த போட்டி நிகழ்வுகள் மூலம் சிறந்த நற்பிரஜைகளை உருவாக்கமுடியும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.மலர்ச்செல்வன்,
மாணவர்களை சரியான தெரிவின் அடிப்படையில் கொண்டுசெல்வதன் மூலமே நாங்கள் சமூகத்தில் வெற்றிகளை அடையமுடியும்.அதன் அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் வாசகர் வட்டங்களை அமைத்துவருகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் வாசிப்பு மிகவும் குறைந்தளவிலேயே மாணவர்கள் மத்தியில் உள்ள.இதனால் உலக நடப்பு விடயங்களை அவர்கள் அறிந்துகொள்வது குறைவாகவே உள்ளது.
உயர்தரம் கல்வி பயிலும் மாணவர்கள் பரீட்சை வேளையின்போதே பொதுஅறிவு தொடர்பான விடயங்களை கற்கின்றனர்.நாங்கள் மனனஞ்செய்வதனால் பொது அறிவு வளர்ந்துவிடாது.தொடர்ச்சியாக வாசிப்பதன் மூலமே அவற்றினை அடையமுடியும்.
பாடசாலை சென்றுவிட்டு பின்னர் உணவின் பின்னர் தொடர்ச்சியாக தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு இரவு வேளைகளில் மாணவர்கள் தொலைக்காட்சிக்கு முன்பாக அமரும் நிலை உள்ளதாக பலர் கவலை தெரிவிக்கின்றனர்.
மதுபோதையில் உள்ளவரின் நிலையே இந்த தொலைக்காட்சிகளில் நாடக தொடர்களை பார்ப்பவர்களுக்கும் ஏற்படுகின்றது.மாணவர்கள் கல்வியில் உயரவேண்டுமானால் வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகள் நிறுத்தப்படவேண்டும் என்றார்.
இதேவேளை இங்கு உரையாற்றிய சமூக சேவையாளர் ஏ.மகேந்திரன் நாங்கள் அடுத்தவரை துன்புறுத்தியோ,அடுத்தவரை அடிமையாக்கியோ அடையும் இன்பம் ஒருபோதும் நிலைக்காது என்று தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஒரு மனிதன் அடுத்த மனிதன் இன்பம் அடைவதை பார்த்து அடையும் சந்தோசமே உண்மையான சந்தோசமாகும்.
ஆனால் இன்று உள்ள நிலைமையானது மற்றவர் எவ்வாறு சென்றாலும் பரவாயில்லை.நாங்களும் எமது குடும்பமும் சந்தோசமாக இருந்தால்போதும் என்ற எண்ணத்தில் வாழ்கின்றனர்.இவ்வாறான சுயநலம் ஒருபோதும் பொது நலனை ஏற்படுத்தாது என்றார்.