அறநெறிக்கல்வியை மட்டும் போதிக்காது மாணவர்களின் உடல்திறனிலும் அக்கரை செலுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
கூழாவடி விபுலானந்தா அறநெறிப்பாடசாலையின் அதிபர் ப.யோகராஜா தலைமையில் இந்த நிகழ்வு மாமாங்கேஸ்வரர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக பல்சமய ஒன்றியங்களின் உறுப்பினர் சிவஸ்ரீ ஜெகதீஸ்வர சர்மா,கூழாவடி பிரதேச செயலாளர் கே.பாரதிதாசன்,கூழாவடி இந்து இளைஞர் மன்ற போசகர் கே.நடராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் வினோத உடைப்போட்டிகளும் நடைபெற்றன.
இங்கு இடம்பெற்ற பல்வேறு விதமான வினோத உடைப்போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.