கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.


குருணாநகலில் இருந்து கல்முனைக்கு சென்றுகொண்டிருந்த வான் பாதையினை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது வானில் பயணம் செய்த சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் அதில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையில் தாயாரின் மரணச்சடங்குக்கு சென்றுகொண்டிருந்தவர்களின் வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.