கல்லடி பாலத்தில் நேற்று குதித்தவர் இன்று சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடிப் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த இளைஞர் இன்று காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி, திருச்செந்தூர் 2ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த ஞானமணி விஜித்திரகுமார் (வயது 40) என்ற குடும்பஸ்தரே கல்லடி, நேற்று வெள்ளிக்கிழமை மாலை வாவிக்குள் பாய்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கிராண் பகுதியில் திருமணம் செய்துள்ளதாகவும் மூன்று பிள்ளைகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றிருந்த இந்த இளைஞர் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் நாடுக்கு திரும்பியிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை கல்லடி,டச்பார் பகுதியில் உள்ள மீனவ தங்குமிட வாவிப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம இடத்துக்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.