மட்டக்களப்பு,வந்தாறுமுலையில் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தினை கௌரவிக்கும் நிகழ்வு வந்தாறுமூலை பொதுமக்களினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
வந்தாறுமுலை நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றிலில் இந்த நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
வந்தாறுமூலை பொதுச்சந்தையில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அதிதிகள் கோலாகலமாக வரவேற்பளிக்கப்பட்டது.
முதன்முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சுமந்திரன், பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றன.