மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான 18வது விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.எம்.நிசாம், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சமூகத்துக்கு சேவையாற்றிவரும் இருவர் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
இதன் அடிப்படையில் ஆண்கள் பிரிவு பாடசாலைகளில் இந்த முதலாம் இத்தினை 353 புள்ளிகளைப்பெற்று சிவானந்தா தேசிய பாடசாலை முதல் இடத்தினையும் 243புள்ளிகளைப்பெற்று புனித மைக்கேல் கல்லூரி இரண்டாம் இடத்தினையும் 118 புள்ளிகளைப்பெற்று தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
பெண்கள் பிரிவில் 310 புள்ளிகளைப்பெற்று கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் முதல் இடத்தினையும் 224புள்ளிகளைப்பெற்று வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை இரண்டாம் இடத்தினையும் சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை 193 புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.