மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் கணித வாரத்தினை முன்னிட்டு கணித கண்காட்சி ஒன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய கணித பாட ஆசிரியர்கள் இணைந்து இந்த கண்காட்சியை ஏற்பாடுசெய்திருந்தனர்.
இதன் ஆரம்ப நிகழ்வு விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய திட்டமிடலுக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிவகுமார்,மண்முனை வடக்கு உடற்கல்வி பணிப்பாளர் ஏ.சிவகுமாரன்,விஞ்ஞானபாட ஆசிரிய ஆலோசகர் எஸ்.சர்வேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கணித பாடம் கற்றும் ஆரம்ப பிரிவு மாணவர்கள் தொடக்கம் உயர் பிரிவு மாணவர்கள் வரையில் பயன்பெறும் வகையில் இந்த கண்காட்சி நடாத்தப்பட்டது.
மாணவர்கள் கணித பாடத்தில் ஆற்றலை அதிகரிப்பதற்காகவும் பங்குபற்றலை அதிகரிப்பதற்காகவும் இவ்வாறான கண்காட்சி நடாத்தப்படுவதாக வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.