மட்டக்களப்பு வரும் உல்லாசப்பயணிகளின் கவனத்தினை கவரும் யோகாசனம்

மட்டக்களப்புக்குவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த பல வருடங்களை விட இந்த வருடம் மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது.


இவ்வாறு வருகை தரும் உல்லாசப் பயணிகளைக் கிழக்கின் இயற்கை வளங்கள், சிறப்புமிக்க இடங்கள் மிகவும் கவர்ந்துள்ளன.

இவர்களில் பலர் இங்கு இடம்பெறும் சமய, கலாசார நிகழ்வுகளின் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற யோகா சிகிச்சை நிபுணர் கலாபூஷணம் செல்லையா துரையப்பா அவர்களை இணையத்தளத்தின் மூலம் இனம் கண்ட பலர் அவரிடம் குறுகிய கால யோகா பயிற்சியை பெற்றுச் செல்லத் தவறுவதில்லை.

சுவிஸ், ரசியா, இலண்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாட்டு உல்லாசப் பயணிகள் வயோதிபர், இளைஞர், சிறார்கள் ஆகியோர் வயது வித்தியாசமின்றி யோகா கற்கின்றனர்.

இயற்கைச் சூழலைக் கொண்ட பாசிக்குடா, நாவலடி கடற்கரைகளில் யோகா பயிற்சிகளின் ஈடுபட்டுவருகின்றனர்.

யோகா சிகிச்சை நிபுணர் கலாபூஷணம் செல்லையா துரையப்பா இந்த யோகாசன பயிற்சிகளை வழங்கிவருகின்றார்.