பிரான்ஸ் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டம்

பாடுமீன் சமுக அபிவிருத்திச் சங்கத்தின் இவ்வாண்டுக்கான பொதுக்கூட்டம் லாகூர்நெவ் எனும் நகரில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் சங்கத்தின் கடந்தகால சேவைகளும் எதிர்கால செயற்பாடுகளையும் வளர்ச்சியையும் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

உறுப்பினர்கள் பலர் தங்களது கருத்துக்களையும் எதிர்கால வளர்ச்சியைப் பற்றியும் செயற்பாடுகளைப்பற்றியும் தெரிவித்தனர்.இதன் போது பல புதிய உறுப்பினர்களும் இணைந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் திட்டமும் கொண்டுவரப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் இவ்வருடத்திற்கான கணக்கறிக்கை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.