மட்டக்களப்பு மாவட்டத்தில் வெசாக் தினத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த மற்றும் சட்ட விரோத மதுபானங்கள் வைத்திருந்த 18 இடங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் இரண்டு போதைவஸ்து வியாபாரிகளுடன் 20பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பெருமளவான மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் ஒரு வாரத்தில் இவ்வளவு சட்ட விரோத மதுபானசாலைகள் கைப்பற்றப்பட்டு இதுவே முதல் தடவையாகும்.
கடந்த முதலாம் திகதி தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மதுவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
இலங்கை மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.கே.ஜி.குணவர்த்தனவின் பணிப்புரைக்கமைய மதுவரித்திணைக்களத்தின் குற்றப்பிரிவு ஆணையாளர் டி.மல்லவ நேரடியாக மட்டக்களப்புக்கு வருகைதந்து இதற்கான பணியை வழிநடாத்தியிருந்தார்.
மதுவரித்திணைக்களத்தின் கிழக்கு பிராந்திய உதவி ஆணையாளர் கே.எம்.ஜி.பண்டாரவின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களின் அத்தியட்சகர் என்.சோதிநாதனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையிலான குழுவினர் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்கீழ் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சுமார் 20 லீற்றர் கசிப்பு வடிசாராயமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெல்லாவெளி,வாழைச்சேனை,மண்முனைப்பற்று,காத்தான்குடி,வவுணதீவு ஆகிய பகுதிகளில் இருந்தே அதிகளவான சட்ட விரோத மதுபான விற்பனை நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
இதேபோன்று காத்தான்குடி பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து கஞ்சா மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.இதன்போது 20பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 07ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.