எல்லைப்பகுதி மக்களுக்கு தாமரைக்கேணி ஸ்ரீ சாயி சேவா நிலையத்தினால் உதவிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு, தாமரைக்கேணி ஸ்ரீ சாயி சேவா நிலையத்தின் கிராம ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதி மக்களுக்கான உதவிபொருட்கள் வழங்கப்பட்டன.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான வடமுனை,ஊற்றுச்சேனை ஆகிய பகுதிகளில் உள்ள வறி மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

சுhயிபாபாவின் நான்காவது சமாதி தினத்தினை முன்னிட்டு தாமரைக்கேணி ஸ்ரீ சாயி சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

தாமரைக்கேணி ஸ்ரீ சாயி சேவா நிலையத்தின் தலைவர் எஸ்.சாமித்தம்பி தலைமையிலான குழுவினர் நேரடியாகச்சென்று இந்த உதவிகளை வழங்கிவைத்தனர்.

இதன்போது சுமார் 300குடும்பங்களுக்கான படுக்கை விரிப்புகள் உட்பட  உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

தொடர்ச்சியாக தாமரைக்கேணி ஸ்ரீ சாயி சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் இப்பகுதி மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.