மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த தாய் தலைமறைவு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தையொன்றை ஈன்தாய் அதனை கைவிட்டுச்சென்ற சோக நிகழ்வு நடைபெற்றுள்ளது.


கடந்த மூன்று வாரத்திற்கு முன்னர் வைத்தியசாலையில் மட்டக்களப்பினை சேர்ந்த யுவதியொருவர் குறை மாதத்தில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த குழந்தையானது போதனா வைத்தியசாலையின் விசேட சிசுக்கள் சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.

கடந்த மூன்று வாரமாக குறித்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை தொடக்கம் வைத்தியசாலையில் இருந்துவந்த குறித்த குழந்தையின் தாயார் தலைமறைவாகியுள்ளார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.