களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் கௌரவிப்பு நிகழ்வும் பரிசளிப்பும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடீ பிரதேசத்துக்குட்பட்ட களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று பிற்பகல் சிறப்பாக நடைபெற்றது.


களுதாவளை கலாசார மண்டபத்தில் களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் க.வேல்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விவசாய,கால்நடை,மீன்பிடி அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன்,மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல்பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம்,பட்டிருப்ப வலய கல்வி பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் வலய,கோட்டமட்டங்களில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் இதன்போது பரிசுகள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு சேவையாற்றியவர்கள்,கல்விச்சேவையில் சாதனை படைத்தவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.