“கூத்துப்பெருவிழா” நூல் வெளியீடு -கூத்துக்கலைஞர்களுக்கு உதவ முன்வருமாறும் அழைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமிக்க கூத்தின் பெருமையினை வெளிப்படுத்தும் வகையிலான “கூத்துப்பெருவிழா” நூல் வெளியிட்டுவைக்கப்பட்டது.


கூத்துக்கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டு வெளியிட்டுவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நூல் உருவாக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

கூத்துக்கலையினை இளம் தலைமுறையினர் மத்தியில் கொண்டுசெல்லும் வகையில் இந்த நூல் வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் வெளியீடு மூலம் பெறப்படும் பணம் கூத்துக்கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அதற்காக நிதியம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாகவும் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தேவசிங்கம் தெரிவித்தார்.

இந்த நூலின் விலை 200ரூபா எனவும் இதனைப்பெற்று கூத்துக்கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

புலம்பெயர்ந்துவாழும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இதற்கு உதவ முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.