பெரிய வெள்ளியை முன்னிட்டு மரியால் பேராலயத்தின் திருச்சிலுவை பாதை

ஜேசு கிறிஸ்து உயிர்பெற்ற தினமாக கருதப்படும் பெரியவெள்ளியை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் இன்று காலை சிலுவைப்பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.


பெரியவெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பின் கிறிஸ்த பேராலயமாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தின் திருச்சிலுவை பாதை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் முன்பாக ஆரம்பமான இந்த திருச்சிலுவைபாதை நிகழ்வு கோவிந்தன் வீதியுடாக பிரதான வீதியூடாகவந்த மட்டக்களப்பு பஸ் நிலையம் ஊடாக சென்றல் வீதியை அடைந்து அதன் ஊடாக ஆலயத்தினை வந்தடைந்தது.