நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் 49வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழமைவாய்ந்த விளையாட்டுக்கழகங்களில் ஒன்றான களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் 49வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.


இந்த நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் கழக கொடியேற்றப்பட்டு உயிரிழந்த கழக உறுப்பினர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.தமிழர்களின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் விளையாட்டுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டதுடன் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது கழகத்தின் 49வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் 49 பட்டாசுகள் கொழுத்தப்பட்டு கழக தினமும் நினைவு கூரப்பட்டது.