தமிழ் தேசிய கூட்டமைப்பினை செயற்திறன் மிக்கதாக மாற்றவேண்டும் -கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற் திறன்மிக்க கட்சியாக மாற்றப்படவேண்டு.அதற்காக மாகாணத்தில் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு சிந்தனையுள்ள புத்திஜீவிகள்,கல்விமான்கள் செயற்திறன் உள்ளவர்கள் உள்வாங்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை வலுப்படுத்த கட்சி தலைமை முன்வரவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்தார்.


இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் வாவிக்கரையில் உள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்கால அரசியல் தொடர்பில் கட்சி ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள தலைமை சரியான தெளிவற்ற  இறுக்கமான நிபந்தனைகள் இல்லாமல்  எவ்வி ஒப்பந்தங்களும் செய்யாமல் இந்த அரசுக்கு தலைமை வாக்களிக்குமாறு கோரியதோடு  மத்திய அரசு நிர்வாகத்தில் எவ்வித அமைச்சுப் பொறுப்புக்கள் எடுக்காதநிலையில் தேசிய அரசின் அதிகாரப்பகிர்வுக்குழவில் ஜயா சம்பந்தர் மட்டும் அங்கத்தவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

மத்திய அரசின் ஆட்சி மாற்றத்தின் ஊடாக  கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியாக செயல்பட தீர்மானித்து முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன் முன்று பொறுப்பிற்கான ஒப்பந்தங்கள் செய்து இதன் நல்லெண்ண வெளிப்பாடாக  வரவு செலவுத்திட்டத்திற்கு வாக்களித்தமை நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இத்தோடு எம்மால் கேட்கப்பட்ட அமைச்சு எமக்கு வளங்கப்படாத நிலயில்  தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் நாம் உள்ளபோது முஸ்லீம் காகிரஸ்கட்சியால் ஏமாற்றப்பட்ட நிலையில் எமக்குள்  பலவிடயங்களில் கட்சி நலன்திணிக்கப்பட்டு திட்டமிடாமலும் கூட்டுமுடிவுஅற்றநிலையிலும் செயல்திறன் இல்லாத நிலையில் சுயவிருப்பு பேசும் அளவிற்கு தனித்தனிமுடிவுடன்செயல்படும் நிலைமைகள் உருவாகிவருவது  தமிழ்மக்களாகிய எமக்கு ஆரோக்கியமானதல்ல.

முதலமைச்சர் இல்லை கல்வி அமைச்சு இல்லை காணி அமைச்சு இல்லை சிறுகைத்தொழில் இல்லை தொழில்வாய்பு இல்லை, அதிகார பங்கீட்டினை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் இல்லை. அப்படியாயின் ஏன் இந்த அமைச்சுப்பொறுப்புகளையேற்கவேண்டும்.

எனவே விரைவாக முடிவை அறிவிக்க கூட்டத்தை கூட்டி தகுந்த நடவடிக்கை எடுக்க தலைமை செயல்படவேண்டும்;.;  இத்தோடு எனக்கு கிழக்கு மாகாணசபையில் மக்களுக்கான கடமைகளையும் பொறுப்புக்களையும்  செய்வதற்கு இடமளிக்காது தொடர்பாக மக்கள் என்னிடம் கேள்வி கேட்கின்றனா.

இக்கடமைகள் ஓப்படைக்கப்படாதது தமிழ் தேசிய கூட்டமைப்பும் அக்கட்சியின் தலைவருமே தவிர எமது கட்சிமுடிவுகள் அல்ல.  எமது தலைவரால் சம்பந்தா ஜயாவிற்கு அறிவிக்கப்படடு அந்தமுடிவு சம்பந்தர் ஜயாவால் நிராகரிக்கப்பட்டது உன்மையாகும்.

இது ஆரோக்கியமான விடையமல்ல. தமிழரசுக்கட்சியை தவிர ஏனைய  தலைவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை  இது மக்களின்முடிவல்ல மக்கள் எனக்கு முன்று தடைவைக்குமேல் ஆணைதந்துள்ளனர் .எனவே இதுதொடர்பாக நான்அதிகமாக கருத்துக்கூறவிரும்பவில்லை.

இருந்தாலும் கூட எதிர்காலத்தில் செயல்திறன் உள்ளவையாக இந்த கட்சி மாற்றம்செய்யப்படவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு சிந்தனையுள்ள புத்திஜீவிகள்,கல்விமான்கள் செயற்திறன் உள்ளவர்கள் உள்வாங்கப்பட்டு பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சிசபை பிரதிநிதிகளாக தெரிவுசெய்து செயல்திறன் மிக்க கட்சியாக மாற்றப்படவேண்டும் இங்கு பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றேன்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகத்திற்காக அர்ப்பணித்தவர்கள் பலர் வெளியில் உள்ளனர்.அவர்களையும் ஒன்றிணைத்து செயற்படமுன்வரவேண்டும்.