வீரமுனை இராமகிருஸ்ணமிசன் பாடசாலையினை கட்டியெழுப்பவேண்டும் - பழைய மாணவர் சங்க செயலாளர் பிரதாப்

அம்பாறை மிகவும் பழிமைவாய்ந்த பாடசாலையாகவுள்ள வீரமுனை இராமகிருஸ்ணமிசன் பாடசாலையினை அனைத்துவிதங்களிலும் கட்டியெழுப்பவேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது என பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளரும் அம்பாறை மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தருமான என்.பிரதாப் தெரிவித்தார்.


வீரமுனை இராம கிஷ்ன மிஷன் பாடசாலையின் பழையமாணவர் சங்க பொதுக் கூட்டம் சனிக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது. இதன் படி தலைவராக எஸ்.மகேஸ்வரனும்,செயலாளராக என்.பிரதாப்,; பொருளாளராக சு.தயாபரனும் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களும் இதன்போது தெரிவுசெய்யப்பட்டனர்.

இங்க கடமைகளை பொறுப்பேற்று உரையாற்றிய செயலாளர்,

எமது பாடசாலையின் பொற்காலம் அமரர் இராஜேந்திரா அதிபர் இருந்த காலமாகும்.அன்றைய காலத்தில் எமது பாடசாலை பல வழிகளிலும் வளர்ச்சியடைந்தது.

அன்று கல்விப்பணியுடன் மட்டும் நின்றுவிடாது சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பல முன்னெடுப்புகள் அவரினால் மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த தமிழ் பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்றாகும்.இன்று இந்த பாடசாலையானது பின்தங்கிய நிலையில் உள்ளது.இவற்றினை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்றார்.