மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் சில இடமாற்ற நடவடிக்கைகளினால் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அதிபர் எஸ்.அருட்பிரகாசம் தெரிவித்தார்.


தமது பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்களை விண்ணப்பித்து பெறும்போது அவற்றினை கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் வேறுபாடசாலைக்கு மாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் நல்லையா மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ்.அருட்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.சுதர்சன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த காலத்தில் பல்வேறு சாதனைகள் படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மாணவர்களின் சிறப்பான கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதிதிகளின் உரைகளும் நடைபெற்றன.