கடந்த கால ஆயுதப்போரட்டங்கள் காரணமாக வடக்கு கிழக்கில் 89ஆயிரம் கணவனை இழந்தவர்களாக குடும்பத்தினை தலைமை தாங்குபவர்களாக உள்ளனர்.இதில் ஏறக்குறைய 40ஆயிரம் விதவைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவு சக்தி இல்லத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு சமத்துவத்தினைக்கொடுத்த மதமாக இந்துமதம் உள்ளது.பெண் தெய்வ வழிபாடுகள் இல்லாமல் மதங்கள் உள்ளன.ஆனால் எந்தவொரு விடயத்திலும் பெண்களை முன்னிறுத்தும் தெய்வமாக இந்துமதம் இருந்துவருகின்றது.
தாய்மை உலகில் நிலைத்திருக்கும்போதே பெண்களுக்கான சமத்துவமும் பேணப்படும்.பல்வேறு பேச்சுவழக்கில் தாய்மை நிலைநிறுத்தப்படுகின்றது.தாய்மையை நாங்கள் போற்றினாலும் அதற்குரிய சமத்துவம் வழங்கப்படாத நிலையே இருந்துவருகின்றது.
அரசியல்ரீதியாகவும் நாங்கள் சிந்திக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.மகிந்த ராஜபக்ஜ மீது இருந்த வெறுப்புக்காரணமாக நாங்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வாக்களித்தோம்.இதன் காரணமாக ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது,அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஆனால் வடக்கு கிழக்கு தாயகப்பகுதியில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை.
குறிப்பிட்ட ஒரு சிலமாற்றங்கள் வந்துள்ளது.புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்புகள் குறைந்துள்ளது.ஆனால் ஏனைய விடயங்கள் கடந்த அரசாங்கத்தில் உள்ளதுபோன்றே உள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட விபூசிகாவும் அவரது தயாரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர்.இந்த நிலையில் விபூசிகா பூப்பெய்திய நிலையில் கிளிநொச்சியில் உள்ள சிறுவர் இல்லத்தில் பூப்பூ நீராட்டு விழா நடாத்தப்பட்டது.இதற்கு தாயாரை அனுமதிக்குமாறு விபூசிகா ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலை ஆணையாளருக்கு கடிதம் எழுதியபோதிலும் அந்த தாயாரை தனது குழந்தையின் நிகழ்வினை பார்க்க இந்த அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை.இவ்வாறான நிலையிலேயே நாங்கள் இந்த மகளிர் தினத்தினை அனுஸ்டித்துவருகின்றோம்.
இதேபோன்று பிரான்சில் இருந்துவந்த பெண்ணும் அவரது மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி பிரான்ஸ் சென்று திருமணம் முடித்தவர் கிளிநொச்சிவந்துசென்ற நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலையிலேயே நாங்கள் மகளிர் தினத்தினைக்கொண்டாடிவருகின்ற நிலையில் இந்த மைத்திரிபால அரசாங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
பெண்களின் உரிமையென்பதை இலங்கையில் உள்ள அரசாங்கங்கள் ஆட்சிமாறினாலும் நிர்ப்பந்தங்கள் தொடர்ந்தவண்ணமேயுள்ளன.அதேபோன்று ஆண்களும் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலையே உள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றவர்கள்கூட மீண்டும் திரும்பிவரும்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.இந்த அரசாங்கம் ஆட்சியமைத்து இரண்டு மாதங்களில் ஒன்பது பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.வடக்கு கிழக்கின் பல பகுதிகளையும் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றவண்ணமே உள்ளன.
பெண்கள் தினம் அனுஷ்டிப்பதனால் மட்டும் பெண்களுக்கு உரிமைகள் அனைத்தும் கிடைத்துவிடும் என்று கூறமுடியாது.
இலங்கையில் தமிழ் மக்கள் நடாத்திய அகிம்சை மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்களின் பெண்களின் பங்கானது மகத்துவமானது. எமது விடுதலைப்போராட்டத்தின் சம பங்கு பெண்களுக்குரியது.மாவீரர்களில் பெண் மாவீரர்கள் பலர் மட்டக்களப்பினை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.அதேபோன்று விடுதலைப்புலிகளின் படையணியில் படையாண்டாவெளியை சேர்ந்த போராளியான அன்பரசியின் பெயரில் அந்த படையணி இருந்தது.இவ்வாறு போராட்டத்தில் இரண்டறக்கலந்திருந்தவர்கள் பெண்களாகும்.
இதேபோன்று புலம்பெயர்ந்த மக்களில் பெண்கள் பலர் சாதனைகளைப் படைத்துவருகின்றனர். அவர்களும் எமது விடுதலைப்போராட்டத்துக்கு பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர்.புலம்பெயர்ந்த அமைப்புகள் என்பதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதும் பின்னிப்பிணைந்துள்ளது.
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல புலம்பெயர்ந்துவாழும் சமூகமும் பின்னிப்பிணைந்த சக்தியாக இருக்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால தற்போது பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.அங்கு தமது தாயக மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்கவேண்டும்,இராணுவ மயமாக்களை குறைக்கவேண்டும்,மக்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்கவேண்டும் என்று ஒரு போராட்டத்தினை அங்கு செய்துகொண்டுள்ளனர்.அதிலும் அதிகமான பங்களிப்பினை பெண்கள் வழங்கிவருகின்றனர்.
கடந்த கால ஆயுதப்போரட்டங்கள் காரணமாக வடக்கு கிழக்கில் 89ஆயிரம் கணவனை இழந்தவர்களாக குடும்பத்தினை தலைமை தாங்குபவர்களாக உள்ளனர்.இதில் ஏறக்குறைய 40ஆயிரம் விதவைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர்.
மற்ற இனங்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டால் அப்பகுதிலேயே வாழுகின்றனர்.ஆனால் நாங்கள் அவ்வாறு இருப்பதில்லை.இது தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டும்.
கிழக்கு மாகாணசபையை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் பெரும்பாதிப்புகளை எதிர்கொண்டுவந்தனர்.அதன் காரணமாகவே நாங்கள் அமைச்சு பொறுப்புகளை பெற்றுக்கொண்டோம்.எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கிழக்கு மாகாணசபையில் எதனையும் செய்யமுடியாது என்பதனாலேயே அவற்றினைப்பெற்றுக்கொண்டோம்.நாங்கள் இந்த அமைச்சுப்பொறுப்புகளை எடுத்திருக்காவிட்டால் அடுத்த இரண்டறை வருடங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினாலேயே அமைச்சுப்பொறுப்புகளை பெற்றுக்கொண்டோம்.
சலுகைக்காக சோரம்போகும் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல.சமுர்த்தி முத்திரை வழங்க அழைத்துவிட்டு அரசியல் கதைப்பவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல.