கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்த எம்எஸ்எஸ் அமீர்அலி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து ஏற்பட்டவெற்றிடத்திற்கு செய்யித் அலி ஸாஹிர் மௌலானா மாகாணசபை உறுப்பினர் பதவிற்கு தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டார்.
இப்பதவிப்பிரமாண நிகழ்வில் கிழக்கு மாகாணசபை தவிசாளர் ஆரியவதி கலபத்தி, உறுப்பினர் சட்டத்தரணி ஜேஎம் லாஹிர் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2012ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட செய்யித் அலி ஸாஹிர் மௌலானா இருதடவைகள் ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக இருந்த இவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமாவார்.