(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசாங்க கள ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர்அலி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
கடந்த கால அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அரச கள ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கும் நடைமுறையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக அரச கள ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் 1760 அரச கள ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் மற்றும் பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டனர்.