மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசம் டெங்கு அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக டெங்கு நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட நாவற்குடா பொதுச் சுகாதாரப் பகுதியில் 12.02.2015 அன்று காலை 6.00 மணி முதல் மாநகர சபையும் சுகாதாரத் திணைக்களமும் இணைந்து பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக பொது மக்கள் தங்களது வீட்டுச் சூழலில் நுளம்புகள் பெருக்கூடிய கொள்கலன்கள், டயர்கள், ரின்கள் பொன்ற பொருட்களை அகற்றுவதுடன் அதனை அன்றை தினம் வருகை தரும் மாநகர ஊழியர்களிடம் கையளிக்கும்படியும் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெற்றுக் காணிகள் நீண்ட காலம் பூட்டி வைக்கப்பட்டுள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய ஏதுக்களை அழித்தொழிக்க உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இல்லாவிடின், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வெற்றுக்காணிகள் மற்றும் பூட்டப்பட்ட வீடுகள் மாநகர சபையினால் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே பொது மக்கள் அனைவரும் ஏற்படவுள்ள அபாய நிலையைக் கருத்திற்கொண்டு டெங்கு நுளம்புகளை அழிக்க ஒத்துழைப்பு நல்குமாறு மாநகர ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.