மட்டக்களப்பு நகரில் உள்ள வீதிகளில் குப்பைகளை வீசிய மூவருக்கு எதிராக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 06ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதமாலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதமாலன்,
மட்டக்களப்பு நகரில் உள்ள வீதிகளில் கொட்டப்படும் குப்பைகளினால் நாய்கள் மற்றும் காகங்களில் தொல்லைகள் ஏற்பட்டுள்ளதுடன் நகருக்கு வருவோருக்கும் வீதிகளில் செல்வோருக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டது.
அத்துடன் இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருக்கத்துக்கும் ஏதுவாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் நகரில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் வசிப்போருக்கு கடந்த காலத்தில் குப்பைகள் போடவேண்டிய முறைகள் தொடர்பில் பல்வேறு தடவைகள் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவந்துள்ளன.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரையில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் பிராந்திய சுற்றாடல் பிரிவு பொலிஸாரின் உதவியுடன் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வீதிகளில் குப்பைகள் கொட்டிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இ சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் பிராந்திய சுற்றாடல் பிரிவு பொலிஸாரினால் நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்வரும் 06ஆம் திகதி வரை வழக்கினை நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா ஒத்திவைத்தாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.