இருதயபுரத்தில் பெண்ணின் மாலையினை அறுத்துச்சென்றவர் பொதுமக்களினால் மடக்கப்பிடிப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் பெண்ணொருவரின் தங்க மாலை அறுத்துச்சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 8.00மணியளவில் இருதயபுரம் மூன்றாம் குறுக்கு வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்னொருவரின் தங்கமாலையினை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பிய்த்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அவனை வளைத்துப்பிடித்து மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவரை விசாரணை செய்த பொலிஸார் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி மேலதி விசாரணைகளுக்காக 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் இருதயபுரம் 12ஆம் குறுக்கினை சேர்ந்த தர்மராஜா ராஜ்குமார் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு பவுண் தங்கமாலையை இவ்வாறு இவர் பறித்துச்சென்ற நிலையில் இவர் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாகவும் இவர் வேறு கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.