வணங்கும் ஒவ்வொரு பக்தரும் அதனை அதனை பாலாபிசேகம் செய்து வணங்கிவருகின்றனர்.
இந்தவகையில் இன்று(03.12.2015) மட்டக்களப்பு தாமரைக்கேணி சாயி நிலையத்திலும் வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பாலாபிசேகம் செய்தும் பெருமளவிலான மக்கள் வழிபட்டனர்.
இக்கைங்கரிய சேவையினை ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாயி பக்தரான லவன் என்பவரே மேற்கொண்டுவருகின்றார்.
லவன் அவர்கள் சுவாமி தரிசனம் பெறும்பொருட்டு அண்மையில் புட்டபர்த்தி சென்றிருந்தார். அப்போது அங்கு தங்குவதற்கான அறை ஒன்றினை பெற்றுக்கொண்டு அறையினுள்ளே கதிரை ஒன்றில் அமர்ந்துகொண்டு இருந்தவேளை தன் தனிமை சற்று கவலையளித்தது அப்போது தன் எதிரே சுவரில் மாட்டியிருந்த தனது இரண்டு கைகளாலும் ஆசீர்வதித்ததுபோல் காட்சிதந்த பகவானின் படத்தைக் கண்ணுற்ற அவர் தனிமையை மறந்து லயித்திருந்தவேளையில் அப்படத்திலுள்ள பகவானின் இரு அபயக்கரங்களிலுமிருந்து விபூதி சொரிவதைக்கண்டு செய்வதறியாது ஆனந்தத்தில் மூழ்கினார்.
இவ்வேளையில் பகவானின் பிரசன்னம் தனது அறையினுள் நிகழ்ந்திருப்பதை உணர்ந்துகொண்ட அவர் உடனடியாக செயற்பட்டு பகவானுக்காக அறையினுள் இருந்த கதிரை ஒன்றினை எடுத்து பகவானின் படத்திற்கு கீழே பகவான் அதில் அமர்ந்திருந்து அருள்புரியவேண்டுமென்ற நோக்கத்துடன் வைத்துவிட்டார்.
இருப்பினும் வெறுமையான ஆசனத்திலே பகவானை அமரவைப்பதா எனும் அதிருப்தியில் வெளியே ஓடிச்சென்று கடையிலே புதிய வேட்டி ஒன்றினை வாங்கிவந்து அக்கதிரையை அலங்கரித்ததுடன் அருகிலே ஒரு டம்லரிலே நீரும் வைத்துவிட்டு உடனடியாக இதனை வெளியிலுள்ள பக்தர்களுடன் பகிர்;ந்துகொள்ளவேண்டுமெனும் அவாவவுடன் வெளியே சென்றார்.
செல்லும் வழியில் சந்தித்த பக்தர் ஒருவரிடம் இதனைத் தெரிவித்தபொழுது புன்னகைத்த நண்பர் “இப்பொழுது சென்று பாருங்கள் அங்கு விபூதி நிறைந்திப்பதுடன் சுவாமியின் ஆசனத்திலுள் உள்ள விபூதியினுள்ளும் தீர்த்தம் உள்ள டம்ரரினுள்ளும் இரு லிங்கங்கள் உள்ளன” என கூறி தான் கண்ட கனவு பலித்துவிட்டது என அதிர்;சிபடத்தெரிவித்தார்.
அத்துடன் டம்லரிலே உள்ள லிங்கத்தினை தானும் மற்றைய விபூதியினுள்ளேயுள்ள லிங்கத்தினை நீங்களும் பெற்றுக்கொள்;ளுமாறு அக்கனவிலே சுவாமி தன்னிடம் கூறியதாகவும் அப்பக்தர் தெரிவித்துள்ளார். எனவே அவர்கள் இருவரும் அருகில் நின்றிருந்த ஏனை சிலபக்தர்களையும் அழைத்துக்கொண்டு அறைக்குச் சென்று பார்த்தபொழுது கனவில் கண்ட காட்சிகள் எதுவித மாற்றமும் இல்லாமல் இடம்பெற்றிருந்ததைக் கண்டு அனைவரும் இன்ப அதிர்ச்சியடைந்தனர். மெலும் தான் கண்ட கனவுக் காட்சியில் இவ்லிங்கங்களை நீங்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் எடுத்துச்சென்று அனைவரும் வணங்குவதற்கான ஏற்பாடு செய்யவேண்டுமென சுவாமி அறிவுறத்தியதாகவும் குறித்த பக்தர் தெரிவித்தார். என திரு. லவன் அவர்கள் தனது உரையிலே குறிப்பிட்டார்.














