இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
சிறுபான்மையினங்கள் ஏங்கிக்கொண்டிருந்த வெற்றி இந்த நாட்டில் தற்போது கிடைத்துள்ளது.சிறுபான்மையினத்தை விலக்கிவைத்து இந்த நாட்டில் எதனையும் செய்யமுடியாது என்பதை இந்த தேர்தல் அனைத்து தரப்பினருக்கு உணர்த்தியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த அரசாங்கத்தில் சிறுபான்மையினத்துக்கு போதிய முக்கியத்துவம் இல்லாத காரணத்தினாலும் சிறூபன்மை சமூகத்தினை கடுமையான முறையில் புறந்தள்ளிய காரணத்தினாலும் இன்று மக்கள் ஜனாதிபதித்தேர்தலில் தமது பலத்தினைகாட்டி மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்கள் மிக மோசமான வன்முறைகளை ஜனாதிபதி மகிந்த அரசாங்க காலத்தில் நடத்தப்பட்டது.அவர்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டன.அவர்களின் வர்த்தகங்கள் முடக்கப்பட்டன.அதுமட்டுமன்றி இந்த நாட்டில் வாழும் தமிழ் சமூகமும் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இருந்துவந்தனர்.
இந்த நிலையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள மைத்திரிபால சிறிசேன நல்ல சி;ந்தனைகளைக்கொண்டவர் என நாங்கள் நம்புகின்றோம்.இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினங்களின் உரிமைகளைப்பெற்றுக்கொடுக்க அவர் நடவடிக்கையெடுப்பார் என நம்புகின்றோம்.
குறிப்பாக தென்னிலங்கையில் கடந்த காலத்தில் தமிழர்கள் தொடர்பிலும் முஸ்லிம்கள் தொடர்பிலும் தவறான கருத்துகள் அங்குள்ள மக்களின் மனங்களில் புதைக்கப்பட்டுள்ளன.முதலில் அதனை இல்லாமல்செய்யவேண்டும்.
தென்னிலங்கையில் உள்ள மக்களின் மனங்களில் மாற்றங்கள் வருவதன் மூலமே சிறுபான்மையினத்துக்கான உரிமைகளை வழங்கமுடியும்.முதலில் அதனை ஏற்படுத்தவேண்டும்.
அத்துடன் சகல மக்களையும் சரியான முறையில் பாரபட்சமின்றி புதிய அரசாங்கம் தமது ஆட்சியை செலுத்தவேண்டும்.
இனம்,மொழி,மத வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த நாட்டில் அனைத்து இன மக்களுக்கும் அபிவிருத்தியென்றாலும் வேலைவாய்ப்புகள் என்றாலும் அனைத்து விடயங்களும் தேவையறிந்து சமமாக பகிரப்படவேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்துகின்றோம்.
