மட்டக்களப்பு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த கழக தினத்தினை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாமினை நேற்று சனிக்கிழமை நடத்தியது.
கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து நடாத்தப்பட்ட இந்த இரத்ததான முகாமில் பெருமளவான கழக உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.