இது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அந்தந்த வருடங்களில் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் நடைபெற்றுவந்த வர்ண விருது வழங்கும் விழா இரண்டு வருடங்களாக நடைபெறாமலிருப்பது விளையாட்டு வீரர்கள் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியள்ளது.
கடந்த வருடங்களில் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கு காசோலைகளும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் பரிசுத்தொகையைக்கொண்டு விளையாட்டுவீரர்கள் அவர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து அவர்களின் அடுத்த வருட போட்டிகளுக்கு தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் பற்பல தியாகங்களைச் செய்து கிழக்கு மாகாணத்திற்கு பதக்கங்களை பெற்றுக்கொடுத்து வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் மாகாணத்திற்குரிய பதக்கங்களின் எண்ணிக்கை குறைவடைவதுடன் தேசிய அணியில் எமது மாகாணத்தின் வீரர்கள் தெரிவாகும் எண்ணிக்கை குறைவடையவும் சந்தர்ப்பம் உள்ளது.
எனவே மாகாணத்தின் முதலமைச்சர், விளையாட்டு அமைச்சர், விளையாட்டு பணிப்பாளர், அதிகாரிகள் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு விளையாட்டு வீரர்களின் மனஉளைச்சலை நீக்கி அவர்களுக்கு மன உறுதியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துமாறு விளையாட்டுவீரர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.