மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதி,களுவாஞ்சிக்குடி தபால் நிலைய விதிகளில் உள்ள வீடுகளின் யன்னல் கிறீல் களற்றப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
பெறுமதி வாய்ந்த கையடக்கத்தொலைபேசி, பணம் உட்பட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.