மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் -33 வாக்கு எண்ணும் நிலையங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 தேர்தல் வாக்களிப்பு நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகள் அனைத்தையும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் உள்ள நிலையத்தில் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவித்தாட்சி அதிகாரியுமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.


தேர்தல் வாக்கென்னும் பணிகளில் ஈடுபடவுள்ள பிரதான வாக்கு எண்ணும் நிலையத்திக்கான பிரதான உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவித்தாட்சி அதிகாரியுமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,உதவி மாவட்ட தேர்தல் அதிகாரி சுதாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியில் 115 வாக்களிப்பு நிலையங்களும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 199 வாக்களிப்பு நிலையங்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 100 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பிரதான தேர்தல் நிலையத்தில் வாக்கு எண்ணும் பணிகளுக்காக 33 நிலையங்கள் செயற்படவுள்ளன.இவற்றில் 28 நிலையங்கள் சாதரண வாக்குகள் எண்ணும் நிலையமாகவும் 05 நிலையங்கள் தபால் வாக்கெண்ணும் நிலையமாகவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதுன்போது பிரதான தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்,நடைமுறைகள் தொடர்பில் உதவி தேர்தல் அதிகாரியினால் விளக்கமளிக்கப்பட்டது.