20-01-2014 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி நகர சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் நகர சபைக்கு வந்த காலத்திலிருந்து அவர்களிடம் சொல்லுகின்றோம்; எந்த ஊழல் இருந்தாலும் நிரூபியுங்கள். எங்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்; நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என நாங்களும் தொடர்ச்சியாக கூறி வருகிறோம்.
இறுதியாக கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பொறியியலாளர் அப்துர் றஹ்மான் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றை நடாத்தி இருந்தார். அந்த மகாநாட்டில் காத்தான்குடி நகர சபையில் ஊழல், அதற்கான ஆவனம் எங்களிடம் இருக்கின்றது. நாங்கள் அதை ஆவணப்படுத்தி அதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று கூறி இருந்தார்கள்’ என நகர சபைத் தவிசாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் நகர சபைத் தவிசாளர் தொடர்ந்து கூறுகையில்,
‘நான் அவருக்கு விடுக்கும் செய்தி என்னவென்றால், நகர சபை அப்படி ஏதாவது ஊழல் செய்திருந்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் அமைச்சரவையின் ஊடாக மிகக் கூடுதலான ஆணைக்குழுக்கள் இருக்கிறது. அந்த குழுக்களிடம் உடனடியாகச் சென்று, இந்த நகர சபையில் இருக்கின்ற ஊழல் ஆவணங்களை கொண்டு சமர்ப்பித்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, அதற்குரிய ஆதாரங்கள் மூலம் நாங்கள் குற்றவாளிகளாக காணப்பட வேண்டும்.
இந்த நகர சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஊழல் செய்திருந்தால் அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அவர்களுக்கு நான் பகிரங்கமாக அறிவித்தல் விடுக்கின்றேன். என்னவென்றால் உடனடியாக இன்று ஜனவரி 20ம் திகதியிலிருந்து ஜனவரி 30ம் திகதி வரை, நான் இந்த நகர சபையில் உறுப்பினராக இருக்கின்ற காலத்திலும், உதவித் தவிசாளராக இருக்கின்ற போதும், தற்போது 3 வருடமும் 9 மாத காலப்பகுதியில் நான் தவிசாளராக இருக்கின்ற போதும் நகர சபையில் ஊழல், ஊழல் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றார்களே தவிர எந்த ஊழலையும் நிரூபிக்கவில்லை.
நான் பகிரங்கமாக பல மேடைகளிலும் சபை அமர்வுகளிலும் சவால் விடுத்து இருக்கின்றேன். ஊழல் எங்கிருந்தாலும் அதை ஆதாரப்படுத்தி எங்களுக்குரிய தண்டனைகளை வாங்;கித் தாருங்கள்; அதை அதற்குறிய அதிகாரிகளிடம் கையளியுங்கள் என்று சவால் விடுத்து இருக்கின்றேன். ஆனால் அவர்கள் இதுவரை காலப்பகுதியில் எந்த வகையிலும் ஆவனங்களை எந்த அதிகாரிகளிடமும் கையளிக்கவில்லை.
உடனடியாக இந்த 30ம் திகதிக்கு முதல் நாங்கள் ஊழல் செய்திருந்தால் அதற்குறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்குறிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் உடனடியாக அவர்கள் அந்த விடயத்திலிந்து கட்டாயம் வாபஸ் பெற வேண்டும்.
ஏனென்றால் நானும் இந்த ஊரில் இருக்கின்ற சாதாரண மனிதன். நகர சபை தவிசாரளர் பதவியோ, உதவித் தவிசாளர் பதவியோ, உறுப்பினர் பதவியோ ஏதோ இறைவனின் நாட்டப்படி எனக்கு கிடைத்த பதவி. நாளைக்கு நான் இந்த பதவியில் இருக்கலாம், இல்லாமல் போகலாம்.
நானும் இந்த ஊரில் வாழ வேண்டும். எனது பிள்ளை உள்ளிட்ட எனது குடும்பமும் வாழ வேண்டும்.
ஆகவே இவர்கள் ஊழல், ஊழல் என்றால் கள்ளன், கள்ளன் என்றுதான் அர்த்தம். அந்த அர்த்தத்தை இவர்கள் தொடர்சியாக செய்து வந்தால் நாளைக்கு இந்த ஊரில் என்னுடைய பிள்ளைகளும் நானும் வாழ முடியாமல் போய்விடும்.
உடனடியாக இவர்கள் காத்தான்குடி நகர சபையில் ஊழல் என்ற கூற்றுக்கு ஒரு தீர்வை பெற்று இந்த ஜனவரி 30ம் திகதிக்கு முதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த ஊழல் என்ற கூற்றை வாபஸ் பெற வேண்டும்’ என காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மேலும் தெரிவித்தார்.