கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.


பாடசாலையின் அதிபர் திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சதுர்புஜானந்தாஜி மகராஜ் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்  மற்றும் சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன்,மட்டக்களப் போதனா வைத்தியசாலையின் பல்வைத்திய நிபுணர் டாக்டர் கிருஸாந்தி கேதீசன் மற்றும் செலான் வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் திருமதி பி.இளங்கோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2013ஆம் ஆண்டு பாடசாலையின் பல்வேறு போட்டிகள் மற்றும் பாட விதானங்கள் இணைப்பாட விதானங்களில் சாதனைகள் படைத்த மாணவர்கள் இதன்போது பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது பாடசாலையில் உயர்தரம் மற்றும் சாதாரண தரம்,ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைகள் படைத்த மாணவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பாடசாலையில் கற்பித்தல் செயற்பாடுகளில் செயற்பாடுகளில் சிறப்பாக ஈடுபட்ட மற்றும் பாடசாலையின் செயற்பாடுகளுக்கு சிறப்பாக பங்காற்றிய ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் விசேடமாக பாடசாலையில் இருந்து ஓய்வுபெற்றுச்சென்ற ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.