புன்னைச்சோலை பாலர் பாடசாலையின் ஒளிவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புன்னைச்சோலை பாலர் பாடசாலையின் ஒளிவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.


புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் மற்றும் வண்ணத்துப்பூச்சு சமாதான பூங்காவின் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதியாக ஓய்வுபெற்ற முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் டேவிட் மற்றும் முன்பள்ளிகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் காண்போரை பரவசப்படுத்தியது.

புன்னைச்சோலை பாலர் பாடசாலை மாணவர்களில் இந்த வருடம் வெளியேறிச்செல்லும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நத்தார் பாப்பா வருகைதந்து சிறுவர்களையும் அதிதிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

புன்னைசோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தினால் நடாத்தப்படும் இந்த முன்பள்ளியில் வருடாந்தம் ஒளிவிழா நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.