மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி ஒருவர் நேற்று வெளியாகிய உயர்தரப்பரீட்சை பெறுபேற்றில் மனமுடைந்து தற்கொலைசெய்துகொண்டுள்ள சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தினை சேர்ந்த எஸ்.அபிநயா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலைசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தனது அம்மமாவின் வீட்டில் வைத்து நஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
உயர்தரபெறுபேறு தனக்கு சிறப்பானதாக வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மாணவிக்கு சிறந்த பெறுபேறு வராத காரணத்தினால் இவ்வாறு தற்கொலைசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)