இதனை முன்னிட்டு மட்;டக்களப்பு புளியந்தீவு அன்னை மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இந்த ஆராதனைகள் நடைபெற்றன.
இதன்போது நாட்டில் நீடித்த அமைதியும் சாந்தியும் ஏற்படவேண்டும் என சிறப்பு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த ஆராதனையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.