( லியோன் )
மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட வலய அழகியல் தின நிகழ்வு இன்று காலை 09.00 மணிக்கு மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவாக பணிப்பாளர் க .பிரேம்குமார் ,கௌரவ விருந்தினராக ஓய்வு பெற்ற ஆசிரியர் கோ .குணம் சவரிராஜா மற்றும் கல்வி வலய அலுவலக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு வலய அழகியல் தின நிகழ்வில் தமிழ் மொழித்தின போட்டியில் அகில இலங்கை ரீதியில் பிரிவு இரண்டில் மூன்றாம் இடத்தை பெற்ற மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர பாடசாலை மாணவர்களின் குழு இசை நிகழ்வும் ,மூன்றாம் இடத்தை பெற்ற மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவர்களின் தனி நடனம் ,பிரிவு ஒன்றில் இரண்டாம் இடத்தை பெற்ற குழு இசை நிகழ்வும் , மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களின் நாடகம் ஆகிய நிகழ்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் ,கலைஞர்களான ஓய்வு பெற்ற அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி ரஜனி நடராஜா ,வயலின் இசை கலைஞர் திருமதி ஜீவா அருணாச்சலம் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர் .