மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராம பிரதான மற்றும் உள் வீதிகளில் வெள்ளநீர் வடிந்து செல்ல முடியாத நிலையில் தேங்கி நிற்பதனால் இவ்வீதிகளை அன்றாடம் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ் வீதிகள் முறையாக நிர்மானிக்கப்பட்டமையாலும் அதேபோன்று முறையான வடிகாலமைப்புகள் இல்லாமையாலும் வீதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதாக இப்பகுதி மக்களை தெரிவிக்கின்றனர் .
ஊறணி, இருதயபுரம்,கருவப்பங்கேணி ,ஜெயந்திபுரம் ,குமாரபுரம் ,புன்னைச்சோலை ,அமிர்தகழி ,மட்டிக்கழி ,மாமாங்கம் ,கூழாவடி ,திஸ்சவீரசிங்கம் சதுர்க்கம் ஆகிய கிராமசேவை பிரிவுகளில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் உள்வீதிகள் தற்போது இவ்வாரான நிலையில் காணப்படுகின்றது .
எனவே உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு இக்கிராமபுர வீதிகளை பார்வையிட்டு முறையான வீதி கட்டமைப்புக்களையும் ,வடிகான்களையும் அமைக்குமாறு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் .