மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் மெய்வல்லுனர் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அனைவரையும் பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இந்த அறிவித்தலை மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் வ.மோகனக்குமார் விடுத்துள்ளார்.
மாவட்டத்திலுள்ள மெய்வல்லுனர் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அனைவரையும் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் விடுத்துள்ள அறிவித்தலில்,
மாவட்டத்தின் விளையாட்டுத் தேவைகள், தகவல் திரட்டுதல் விளையாட்டுப் பயிற்சியளித்தல் போட்டிகளுக்கான மத்தியஸ்தம் உள்ளிட்ட விளையாட்டுத்துறைசார்ந்த விடயங்களுக்காக சகல மெய்வல்லுனர் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அனைவரையும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கை மெய்வல்லுனர்சங்கத்தால் நடத்தப்பட்ட மெய்வல்லுனர் தெழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சன்றிதழ் பிரதியுடன் சுயவிபரங்களையும் 15.01.2015 முன்னதாக அ.அ.மு.அலிசியாம் செயளாளர் மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் இல.47ஃ9 மாக்கார் மாவடி வீதி ஏறாவூர்-3யு என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
