கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு உதவி

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளுக்கு மேல் பெற்ற ஜெ.தனேஸ்காந் மற்றும் ந.ந.அபிஸேக்  ஆகிய இரு மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு வித்தியாலய அதிபர் திருமதி அருட்சோதி தலமையில் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் (ஆரம்பப் பிரிவு) சச்சிதானந்தம் அதிதியாகக் கலந்துகொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்தார்.