மட்டு.நகர் கலைகளுக்கு பேர் போன மாவட்டம் என்பது சகலரும் அறிந்ததே அந்தவகையில்; மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைசிறந்த கழகங்களுள் ஒன்றாகிய ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் ரிதத்தின் கலைச் சங்கமம் நிகழ்வு நேற்று (28) கழகத்தின் முன்னால் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான விஜயராஜ் அவர்களின் தலைமையில் மட் ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும் ஏனைய அதிதிகளாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியகலாநிதி கருணாகரன், ஆனைப்பந்தி பொண்கள் பாடசாலையின் அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் மற்றும் கழக உறுப்பினர்கள் சிறுவர்கள் பார்வையார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் 09ம் ஆண்டு பூர்த்தியையும் இவ் வருட இறுதியினை சிறப்பிக்கும் முகமாகவும் மேற்படி நிகழ்வுகள் நடாத்தப்பட்டது. அத்துடன் அப்பிரதேசத்தில் இயங்கும் ஏனைய கழகங்களாகிய கலாபம் கலை மன்றம், இளைஞர் முன்னேற்றக் கழகம், மலரும் மொட்டுக்கள் சிறுவர் கழகம் ஆகியவற்றை ஒன்றிணைத்து இந்நிகழ்வினை மேற்கொண்டதுடன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில் பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்களின் கழகத்தினரால் கௌரவிக்கப்பட்டதுடன். அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் கிடைக்கப்பெற்ற ஒலி அமைப்பு சாதனம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பன கழகத்தின் தலைவர் கிருரஜன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.











