ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 69வது பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பு காலத்தின் நான்காவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளை ஏற்பாடுசெய்த ஐந்தாம் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விமலவீர திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக பட்டிருப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் உலகசேகரம் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஐந்தாம் தர பரீட்சையில் சித்தியடைந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.