பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் கிராமங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேவக பிரிவுகளில் பல அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
அதில் முதல் கட்டமாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு செயலக பிரிவுக்குட்பட்ட திமிலதீவு ,சேற்றுக்குடா ஆகிய கிராம சேவக பிரிவுகளில் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவை கட்டிடம் மண்முனை வடக்கு அபிவிருத்தி குழு தலைவரும் ,கிழக்கு மாகான சபை உறுப்பினரும் , ஜனாதிபதி ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் இன்று மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு அபிவிருத்தி குழு தலைவரும் ,கிழக்கு மாகான சபை உறுப்பினரும் , ஜனாதிபதி ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜதீஸ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நீண்ட காலமாக இப்பகுதிகளில் தேவையாக இருந்த பல்தேவை கட்டிடங்கள் இல்லாத குறை இந்த திட்டத்தின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.