கல்லடியில் பல்நோக்கு மண்டபம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவைக்கட்டிடத்தின் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.


மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு தலைவரின் இணைப்பாளருமான பூ.பிரசாந்தன்,மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜதிஸ்குமார்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் இந்த பல்நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இப்பகுதியில் பொது மண்டபம் இல்லாத காரணத்தினால் பொது நிகழ்வுகளை நடத்துவதில் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கிவந்தனர்.