மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் நடத்திய முன்பள்ளி சிறுவர்களின் கலை விழா

(லியோன்)

சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சின் சிறுவர் செயலகம் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நடத்திய சிறுவர்களின் கலைவிழா நேற்று தன்னாமுனையிலுள்ள மியானி மண்டபத்தில் நடைபெற்றது.


மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், பிரதேச செயலாளர்கள், முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாவட்டத்திலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த கலைவிழாவில் மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகளும் பரிசளிப்பும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் விசேடமாக சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்கான கதை கூறுதலில் தனக்கென ஒரு பாணியைக்கொண்டு அனைவரையும் கவர்ந்த அன்புடன் மாமா என்று அழைக்கப்படும் மாஸ்டர் சிவலிங்கம் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் அவரின் சிறுவர்களுக்கான கதை கூறும் நிகழ்வு இடம்பெற்றதுடன் அனைவரது கவனத்தினையும் அந்த நிகழ்வு ஈர்த்தது.