நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00மணியளவில் மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டான் மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் மயிலம்பாவெளியை சேர்ந்த க.குருகுலசிங்கம்(65வயதுஎன்பவரே உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தபோது காரில் மோதுண்டுள்ளார்.இதன்போது பாடுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 4.00மணியளவில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் காரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
